காதலிக்காமலும் கவிதை வருமோ ...!.?

E-mail Print PDF
நான் ஏன் காதலிக்கவில்லை! ! ! !

காதலிக்க தெரியாமலா...??
இல்லை இல்லை .....
கலை உலகம் கற்றுக்கொடுத்துள்ளது ...
கலை படைப்புகளில்..
முக்கால் வாசி..
காதல் பாடங்களே...!!

எனக்கேற்றவள் கிடைக்காமலா...???
இல்லை இல்லை ...
எனக்கேற்ற ஒரு சிலரையேனும்
நான் கடந்திருப்பேன்.

யாருக்கும் என்னை பிடிக்காமலா...??
இல்லை இல்லை....
என்னைப் பிடித்த பலரை
நான் கடந்திருக்கிறேன் ...

பின் ஏன்..??
தோல்வியின் அச்சமோ..?
இருக்கலாம்..

உண்மை காதல் - வெற்றி அடையும்
என்பது என் எண்ணம்...!!
தோற்றால் ., காதல் பொய் ஆகுமோ ...?
எந்தக் கவிஞரும் அப்படி பாடவில்லை...!

பின் ஏன்...?
இம் உண்மை உணர்தேன்..

காதலை பெற்றோர் ஏற்பார்களோ..?
இல்லையேல் நாம் எதிர்ப்போமோ...??

எதிர்க்கவும் முடியாது..
பிரியவும் முடியாது..
நினைத்தாலே ., அய்யகோ .., அது அவஸ்தை..
அதனால் தானோ நான் காதலிக்க வில்லை...???

காதலிக்காமலும் கவிதை வருமோ ...!.?
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

உயிர்த்தமிழே!

E-mail Print PDF

அம்மா! அம்மா! என்று
அழுது பிறந்து
அன்னியம் பேசுவோர் அதிகம்! அதிகம்!.......
என்னுயிரே! நம்முயிரையேனும் 'உயிர்த்தமிழே!' என்று
உச்சரிக்கச்சொல்!!........

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

இல்லற ஏலம்

E-mail Print PDF

இடைத்தரகன் ஆரம்பித்தான்,
இல்லற ஏலத்தை.
வசீகரமான ஒரு வாலிபன்
விலைக்கு வருகிறான்.

வயது வந்த பெண்களின்
வயோதிக தந்தைகளே,
வசதிற்கேற்ப உங்களின்
விலையைக் கூறுங்கள்.

அவசரத்தில் ஒரு தந்தை
அடிமாட்டு விலையைக் கூற,
அமைதி இழந்த மகளோ, அதில்
அஞ்சாமல் குறுக்கிட்டாள்.

சீர்கெட்டுப் போன, இந்த
சதைப் பிண்டம் வேண்டாம்.
சமுதாயச் சந்தையே, இதனால்
சீரழிந்துப் போய் விடுமே.

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

உன்னத்தான் காதலிச்சேன்

E-mail Print PDF

உன்னத்தான் காதலிச்சேன்
உண்மையாத்தான் காதலிச்சேன்
வண்ணத்து பூச்சிகளாய்
எண்ணற்ற எண்ணங்கள் என்னுள்ளே

......உன்ன மட்டும் தான் பார்த்திருந்தேன்
ஒழுங்காவும் பார்க்க இல்ல
கடுமையா பார்த்திருந்தா
கண் பட்டுப் போகுமென

-எந்த
சொத்தையும் பாராம
ஒத்தையாத்தான் நான் இருந்த -காதல
மதத்தவங்க சொன்னாலும்
உத்தமனாத்தான் நானிருந்தன்

-வீட்டு
வழியால வந்து போவாய் -என்
விழியால பார்த்திருப்பேன்..-நீ
வழி மாறிப் போனாலும் -நீ தந்த
வலி இன்னும் மாறல்லயே...

நீஉம் என்ன காதலிச்சாய்
நாம் கரிச்சட்டிமாத் தான்
நாமிருந்தோம் - 3ம் உலகப்போர்
நடக்குமென விலகிட்டயோ

மென்மையா இருந்த என் மனசு
மெழுகுவர்த்தி யாகிடுச்சு
உன்னத்தான் நெனச்சு நெனச்சு
உருகிடுச்சு உன்னால ...

மெளதாகி போகிடுவேன்
மனமுடஞ்சி போகிடுவேன் -என
மனமுருகி சொல்ல
மனமில்லை என்னவளே!

-என்
மண வற வர உன்ன
மண முடிக்க காத்திருப்பேன்
மன சாட்சி உனக்கிருந்தா
மரியாதையா வந்து விடு...

-என்
உசிர விட காதலிச்சேன்
உசிர விட்டு காதலிச்சேன்
உசிரப்பத்தி கவல இல்ல -அத
மசிராத்தான் நெனச்சிருன்தேன் ..

மன்னிச்சிடு ! உனக்காக உசிர விட
மனமில்லை எனக்கு -மறு கணம்
மாப்பிளை வந்திடுவான் உனக்கு -நீ
மண முடிக்க காத்திருப்பாய் ..

- உன்ன
மறக்க நான் நினைக்கல்ல
நினைக்கத்தான் நேரம் இல்ல...
நாசமாப் போன காதல்
நாளைக்கும் வருமெனக்கு

நெனச்சா பொறை ஏறும்
நெனப்பெல்லாம் உன்மேல -இனி
நெனைக்க நினைக்க மாட்டேன் -நீ
நெஞ்சடைத்து செத்துடுவாய் ....

எள்ளளவும் கவல இல்ல
எந்நேரமும் உன் நெனப்பும் இல்ல -ஆனாலும்
என்றும் மறக்காது உன்னோடான
என் காதல் மட்டும்

விடிஞ்சா போயிடும் ..
விடி காலையில் மறந்திடுவேன் -இனி
விடியும் வரத்தான் உன் நெனப்பு ..
நீ என்ன காதலிச்ச மாதிரி ....

என்றோ ஒர் நாள் எனை
எங்கேயோ பார்த்த முகம்
என்றுரைப்பாய் - அன்ரைக்காய்
காத்திருக்கிறேன் ரெண்டில் ஒன்று பார்த்து விட....

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

Muttru Pulli Vaithathuvum Than YarroooW!

E-mail Print PDF

En  Ennakal Ellameh Unnaiye sumanthu

En Uyirin Asaiyum Neeyeh!

En Sinthaiyellam Neeyeh en Uyireh

En  Ennakal Ellameh Unnaiye sumanthu

Valnthu Vanthen en Anbeee!

Thedal Valvin Swarchiyam ehna

Ninaithu Asaiyudan Unnai Thedi

Thedalil Innimaiyanah Unnarvugalai

Adainthu Unnai Serum Nadgalai

Oviyamaga Idayathil Serthu , Asaiyudan

Kathirunthu..Innimaiyah Unarvugalai Thantha Thedal

Inpangali Vari Vari Allitharum Enru Nambikaiyudan

Unnai thedalil Kandukolvehn , Enru Kathuiruntha

En Thedalukku MUttru Pulli Vaithathuvum Than Yarrooooh .....

Solvaaayo En Anbe!.....Solvaaayo :(

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

Page 1 of 14