அனன்யாவின் பாலிவுட் பிரவேசம்

E-mail Print PDF
User Rating: / 3
PoorBest 

நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனன்யாவைத் தேடி தற்போது இந்திப் பட வாய்ப்புக்களும் வரத் துவங்கி உள்ளன. அனன்யா தமிழ் படங்கள் சிலவற்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஒரே நேரத்தில் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க அனன்யா திட்டமிட்டுள்ளார். இந்தியில் அவர் நடிக்கும் படத்தை இயக்குநர் அஜித் இயக்க உள்ளார். இவர் இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் முன்னாள் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள அனன்யா, இந்தியில் மாதவன் அல்லது அக்ஷய் கண்ணாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த புதிய படங்களுக்கான ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாத்து அம்மணி! ஆத்துல ஒரு கால்... சேத்துல ஒரு கால்ன்னு வழுக்கி விட்டுறப் போகுது.......

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com