அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம்!

E-mail Print PDF
User Rating: / 9
PoorBest 

செல்வராகவன் முதன் முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அல்லு அர்ஜுனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இப்படம் சிறிது நாட்களில் கைவிடப்பட்டது. ஆர்யா, அனுஷ்கா நடிக்க 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்துவதற்காக, பிரேசில் நாட்டிற்கு சென்று படப்பிடிப்பு இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார் செல்வராகவன். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 'இரண்டம் உலகம்' படத்தினை முடித்த உடன் இப்படத்தினை துவங்க இருக்கிறார் செல்வராகவன். படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் முதல் நேரடி தமிழ் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

 

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com