கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அப்படத்திற்கு தாமரை அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பார். ஜீவா, சமந்தா நடிக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் கௌதம் மேனன். முதன் முறையாக கௌதம் மேனன் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா. இளையராஜா இசையமைத்த படங்களுக்கு இதுவரை தாமரை பாடல்கள் எழுதியது இல்லை. முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இடம்பெறும் தாமரை பாடல்களுக்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா. இரு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் இளையராஜா. பெப்சி பிரச்சினையால் இப்படத்தின் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினை தீர்ந்ததும் வேகமாக படப்பணிகள் முடித்து கோடை விடுமுறையில் வெளிவர இருக்கிறது 'நீதானே என் பொன்வசந்தம்' அப்போ.. தாலாட்டுக்கு பஞ்சமிருக்காது......
| < Prev | Next > |
|---|


