டூப் போடாமல் சண்டைபோட்ட அஜித்!

E-mail Print PDF
User Rating: / 8
PoorBest 

அஜித், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'பில்லா 2'. சக்ரி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 'பில்லா 2' படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்களாம். ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அஜித் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் படமாக்கி இருக்கிறார் சக்ரி. இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்கிறது படக்குழு. அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியை போன்று 'பில்லா 2' படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் இருந்தும் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு தானே நடித்து கொடுத்து இருக்கிறார் அஜித். அஜித் நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் வெளிவர இருக்கிறது 'பில்லா 2'. இந்த காலத்துல டூப் போட்டா வேலைக்காவாதுனு தெரிஞ்சுப்போச்சா....?!

 

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com