பிரதமர் விருந்தில் ஸ்ருதி

E-mail Print PDF
User Rating: / 2
PoorBest 

பிரதமர் மன்மோகன்சிங், 'கொலவெறிடி' பாடலின் வெற்றிக்குப்பிறகு டெல்லியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் தனுஷுக்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார் தனுஷ். தேசிய விருது பெற்றபோதுகூட கிடைக்காத ஒரு மகிழச்சியை இந்த ஒரு பாடல் எனக்கு கொடுத்து விட்டது என்று பெருமையடித்துக்கொண்டார். அதேபோல் சமீபத்தில் கமலின் மகள் ஸ்ருதிக்கும் அதேபோன்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மொரீஷியஸ் நாட்டு பிரதமர் மற்றும் அவருடன் வந்த குழுவினருக்கு பிரதமர் டெல்லியில் விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதியும் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பெருமை பெற்றிருக்கிறார். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இது என்று கூறுகிறார் ஸ்ருதி. இந்த விருந்து என்னத்துக்கம்ணி...?

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com