'எந்திரன்' படத்தை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'ராணா' படத்தின் முதல் நாள் படபிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி தீவிர உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டார். பிறகு முழுமையாக குணமடைந்து திரும்பிய ரஜினி 'ராணா' பற்றி வாய் திறக்கவே இல்லை. கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் 'ராணா' உண்டு எனச்சொல்லி வந்தார். ஆனால் சென்டிமென்டாக ஒத்துவராத 'ராணா'வை ரஜினி டிராப் செய்துவிட்டர் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அதை ரஜினி தரப்பில் யாரும் மறுக்கவில்லை. இந்நிலையில் ரஜினியின் அடுத்தபடம் 'கோச்சடையன் 3டி' அனிமேஷன் படம் என்று அறிவித்தார் அந்த படத்தின் இயக்குநர், ரஜினியின் மகள் சௌந்தர்யா ஆகியோர்.
இந்தப் படத்தில் ரஜினியுடன் சரத்குமார், இளம் கதாநாயகன் ஆதி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதை அதிகார பூர்வமாக அறிவித்தார் சௌந்தர்யா. அதேநேரம் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருப்பது யார் என்பதிலும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக சினேகாவும், ரஜினியின் இரண்டாவது நாயகியாக நடனத் தாரகை ஷோபனாவும் உறுதிசெய்யப்பட்டு விட்டதாகக் கூறிப்னார் சௌந்தர்யா. அதேநேரம் முதன்மைக் கதாநாயகியாக யார் நடிக்க இருகிறார்கள் என்று மீடியா அவரிடம் துருவ, "காத்ரீனா கைப்பிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர் நடிப்பது நிச்சயம்" என்று உறுதியாகச் சொன்னார். ஆனால் தற்போது காத்ரீனா 3டி அனிமேஷன் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டாராம். இதனால் 'ராணா' படத்துக்கு ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோனேவை தற்போது முதன்மைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டார் சௌந்தர்யா. இதை தனது டிவிட்டரில் அதிகார பூர்வமாக அறிவித்து இருக்கிறார் சௌந்தர்யா. இதன்மூலம் 'ராணா' இனி இல்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள் ரஜினியின் நட்பு வட்டத்தில். மல்கோவாவோ, அல்ஃபோன்சாவோ.... பழம் ருசியா இருந்தா போதும்!
| < Prev | Next > |
|---|


