கற்பனைக்கு அளவே இல்லாமல் போயிருச்சு! - வடிவேலு

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

'அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை' என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். எனது தாயை கவனித்துக் கொள்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். அவர் உடல்நலம் குன்றி இருக்கிறார். விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முதலில் ஒரு நடிகன். மக்களை சந்தோஷப்படுத்துவதை தொடர்ந்து செய்வேன். இந்தநேரத்தில் அரசியலில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நான் விரும்பவில்லை. அரசியலோடு என்னை இணைத்து வெளியாகும் செய்திகள் மூலம் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. பொதுவாக எல்லாவற்றுக்கும் நேரம் முக்கியம். சிலருக்கு அந்த நேரம் சாதகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு எதிராக இருக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய முக்கியத்துவம் எல்லாம் சினிமாவில் நடிப்பதுதான். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். நான் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படம் திரையுலகில் எனது மறுபிரவேசத்தை பறைசாற்றுவதாக இருக்கும். கைபுள்ளக்கு இப்ப கட்டம் சரியில்ல...

 

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com