மன்னிப்பு கேட்ட மைனா!

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

அதர்வா, அமலா பால் நடிப்பில் பிப்ரவரி 17-ம் தேதி வெளிவர இருக்கும் படம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கில் டி.வி. சேனல்களுக்கு மட்டும் படக்குழுவினர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பில் அமலா பால், "முன்னணி சேனல்களுக்கு மட்டும்தான் பேட்டி கொடுப்பேன்.. சிறு சிறு சேனல்களுக்கு எல்லாம் என்னால் பேட்டி கொடுக்க முடியாது" என்று கூறினார். வளர்ந்துவரும் நேரத்தில் ஏன் இப்படி செய்கிறார் என்று பேச்சுகள் நிலவ ஆரம்பித்தன. 'காதலில் சொதப்புவது எப்படி' காதலர் தினத்தன்று (பிப்ரவரி14) வெளியாக இருக்கிறது. 'காதலில் சொதப்புவது எப்படி' மற்றும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' என அமலா பால் நடித்த இரண்டு படங்களும் இரண்டு நாட்கள் இடைவெளியில் வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களையும் சென்னையில் விளம்பரப்படுத்த அமலா பால் வந்தார்.

அப்போது அமலா பால் அளித்துள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பது:

நிருபர்: அன்று பேட்டி எடுக்கும் போது இரண்டு சேனல்களுக்கு மட்டும்தான் கொடுப்பேன்.. மற்ற சேனல்களுக்கு கொடுக்க மாட்டேன் என்று ஏன் சொன்னீர்கள்?

அமலா பால்: எனக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை.

நிருபர்: ஏன் கேட்கிறேன் என்றால் நானும் அந்த இடத்தில் பாதிக்கப்பட்டேன்.. அதற்காக தான் கேட்கிறேன்... இரண்டு சேனல்களுக்கு மட்டும் தான் கொடுப்பேன் என்று கூறினீர்கள்..

அமலா பால்: என்னிடம் 2 அல்லது 3 சேனல்களுக்கு மட்டும்தான் என்று கூறினார்கள். ஆனால் அங்கு நிறைய பேர் இருந்தார்கள். என்னால் பேட்டி கொடுக்க முடியாமல் போனது. எனக்கு அன்று மாலை 5 மணிக்கு ப்ளைட் இருந்தது. அதனால்தான் அவ்வாறு கூறினேன். அங்கு வந்த யாராவது அதனால் மனம் வருத்தப்பட்டு இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

நிருபர்: ஏன் சேனல்களை தரம் பிரித்தீர்கள் என்று கேட்கிறேன்..

அமலா பால்: அந்த மாதிரி நான் பண்ணவில்லை. நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. காரணம் கூறிவிட்டேன். மேலும் மேலும் கேட்டால் என்னால் எதுவும் பண்ண முடியாது.! பதில் சொல்ல தெரியாம ஏங்க இப்டி சொதப்புறீங்க....? எல்லாம் திமிருதான்....! வெளியில சொல்ல முடியல அதான் அம்ணி.. இப்டி சொதப்புதுப்பா......

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com