அப்பாவா நடிக்கிற அளவுக்கு எனக்கு வயசாகலை! - அரவிந்த்சாமி

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதன்பிறகு 'ரோஜா', 'பம்பாய்', 'மின்சார கனவு', 'என் சுவாசக்காற்றே' உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் மார்க்கெட் நன்றாக இருந்தபோதே திடீரென்று நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு பிஸினஸ்மேனாக தனது தொழிலை மாற்றிக்கொண்டார். இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் அவர் சமந்தாவின் அப்பாவாக நடிப்பதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இன்று அந்த செய்தியை பகீரங்கமாக மறுத்துள்ளார் அரவிந்த்சாமி. அதோடு, மணிரத்னம் 'கடல்' படத்தில் நடிப்பது பற்றி என்னை அணுகவில்லை. அதோடு அப்பா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் வயதும் ஆகிவிடவில்லை. அதனால் மீடியாக்களில் வெளியான இந்த செய்தி தவறானது என்று கூறுகிறார் அரவிந்த்சாமி. இன்னும் சாக்லேட் பாய்-னு நெனப்புத்தான்!

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com