ஐ டைம்ஸ் 2011 கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கடந்த ஆண்டின் ரசிகர்களின் அதிக விருப்பத்திற்குரிய நடிகை பட்டியலில் பெரும்பாலும் வடஇந்திய நடிகைகளே அதிகப்படியான இடங்களை கைப்பற்றியுள்ளனர். அதன் விவரம் வருமாறு- முதலிடத்தை கரீனா கபூம், இரண்டாவது இடத்தை கைத்ரினா கபூரும், 3-வது இடத்தை தீபிகா படுகோனேவும், 4-வது இடத்தை பிரியங்கா சோப்ராவும், 5-வது இடத்தை அனுஷ்கா சோப்ராவும், 6வது இடத்தை வித்யா பாலனும் கைப்பற்றியுள்ளனர். இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராய் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இவர் இதுவரையும் முதல் இடம், இரண்டாம் இடம் எனக்கு தன்னை தக்க வைத்துககொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ருதிஹாசன் 15-வது இடத்தையும், அசின் 17-வது இடத்தையும், த்ரிஷா 19-வது இடத்தையும் கைப்பற்றியிருக்கிறார்கள். இலியானா 20-வது இடத்தையும், சமீரா ரெட்டி 29- வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். அம்மாவாகிட்டாங்கல்ல....!
| < Prev | Next > |
|---|


