நடிகை அனன்யாவுக்கும், திருச்சூரைச் சேர்ந்த தொழிலதிபரான ஆஞ்சநேயனுக்கும் கொச்சியிலுள்ள எர்ணாகுளத்தில் நேற்று நிச்சயதார்த்தம் சீரும், சிறப்புமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமணம் காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணமாகும். மலையாள நடிகை அன்னயா தமிழில் 'நாடோடிகள்', 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' போன்ற படங்களில் நடித்துள்ளார். "தற்போது மலையாளத்தில் திலீப், பிருத்விராஜ் உள்பட நடிகர்ளுடன் 5 படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் நடித்து கொண்டிருக்கிறேன். இந்த படங்களை முடித்த பிறகு, திருமணம் நடைபெறும். எங்களின் திருமணம் இந்த வருட இறுதியில் நடைபெறும், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன்" என்று அனன்யா கூறினார். பறக்கும் போதே கூட்டுக்குள்ள இருக்க ஆசப்படும் சிட்டுக்குருவி!
| < Prev | Next > |
|---|


