அதர்வாவை உச்ச கட்டத்திற்கு கொண்டு செல்லும் கற்பனை!

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

அமலா பால், நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படம், எல்ரெட் குமார் இயக்கத்தில் இம்மாதம் 17-ம் தேதியன்று ரிலீஸாகிறது. படத்தை பற்றி இயக்குநர் எல்ரெட் குமார் நிருபர்களிடம் கூறியதாவது, "படத்தில் ஹீரோ அதர்வாவுக்கும், ஹீரோயின் அமலா பாலுக்கும் காதல் கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக வந்துள்ளது. ஒரு மனிதனை காதல், கோபம் ஆகியவை எப்படி உச்சகட்டத்திற்கு கொண்டு செல்கிறது என்ற கேரக்டரில் அதர்வா நடித்துள்ளார். மேலும், ஐ.டி இளைஞனின் வாழ்க்கையை பாசிட்டிவாகச் எப்படி சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லியுள்ளேன். இப்படத்திற்கு பிறகு அதர்வாவை சினிமா வரலாற்றில் உச்ச கட்டத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்லும்". ஜீ.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் உயர்ரக கேமரா 'பேனோவிஷன்' இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமாராவின் ஒரு நாள் வாடகை 7 லட்ச ரூபாய். இப்படம் தெலுங்கில் 'நிரந்தரம் நீ ஊகலே' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. காஸ்ட்லி கற்பனைதான் போல......

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com