போடா போடி'யில் 6 மாத குழந்தை நடிச்சிருக்கா?

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் 'போடா போடி'. சரத்குமார் மகளான வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக அறிமுகமாகும் படம் இது. ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்க, விக்னேஷ் இயக்கி வருகிறார். தரண் இசையமைத்து வருகிறார்.

'போடா போடி' படம் குறித்து சில தகவல்கள் இதோ:

* ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களின் வாழ்க்கையில் மூன்று கட்டங்களைப் பதிவு செய்யும் படம் இது.

* படப்பிடிப்பு முழுவதுமே லண்டனில் நடத்தி இருக்கிறார்கள். படத்தின் கதைக்கு ஏற்ப, லண்டனில் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

* கதைக்கு தேவைப்பட்டதால், ஒரு குழந்தையை பிறந்த உடனேயும், 6 மாதங்கள் கழித்தும் இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

* சிம்புவின் நடிப்பு இப்படத்தின் வித்தியாசமாக இருக்கும். இதுவரை நீங்கள் திரையில் பார்க்காத சிம்புவை இப்படத்தில் பார்க்க இருக்கிறீர்கள் என்கிறது படக்குழு.

* இதுவரை சிம்பு நடித்த படங்களை விட அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 'போடா போடி'.

* சுமார் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

* ஒளிப்பதிவாளராக DUNCAN TELFORD என்கிற வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் பணியாற்றி வருகிறார்.

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com