கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார் கௌதம். கௌதம் மேனன் படம் என்றாலே பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் 'நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா. முதன் முறையாக கௌதம் மேனன் - இளையராஜா இப்படத்திற்காக கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.இது குறித்து ஜீவா தனது டிவிட்டர் இணையத்தில், "நானும், இளையராஜாவும் இணைவது உண்மைதான்... ஆம்.. 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் தான்!" என்று தெரிவித்துள்ளார்.
| < Prev | Next > |
|---|


