57-வது ஃபிலிம்பேர் விருது: ரன்பீர்-வித்யா சிறந்த நட்சத்திரங்களாக தேர்வு

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

ஹிந்தி திரைப்பட உலகின் 57-வது ஃபிலிம் பேர் விருதுகள் வழங்கும் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பை யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் பிரமாண்டமாக நடைபெற்றது. சிறந்த நடிகராக 'ராக்ஸ்டார்' திரைப்படத்தில் நடித்த ரன்பீர் கபூரும், சிறந்த நடிகையாக 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' திரைப்படத்தில் நடித்த வித்யா பாலனும் தெரிவித்தனர். ஹிருத்திக் ரோஷன், ஃபர்ஹான் நடிப்பில் உருவான 'Zindagi Na Milegi Dobara' திரைப்படம் 7 ஃபிலிம்பேர் விருதுகளை வென்று புதிய சாதனை படைத்தது. சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த வசனம், சிறந்த துணை நடிகர், சிறந்த விமர்சனத்துக்குள்ளான திரைப்படம், சிறந்த சினிமாடோகிராபி மற்றும் சிறந்த நடன அமைப்பு ஆகியவற்றுக்கு அத்திரைப்படம் தெரிவானது. ரன்பீர் கபூரின் 'ராக்ஸ்டார்' திரைப்படம், 5 ஃபிலிம் பேர் விருதுகளை பெற்றுக்கொண்டது. இதில் சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது. விருதினை பெற்றுக்கொண்ட ரன்பீர் கபூர் கருத்து தெரிவிக்கையில், இது எனக்கு நான்காவது விருது, ஒவ்வொரு கனவும் நனவாகி வருகிறது. மிக உன்னதமாக உணர்கிறேன். நன்றி இம்தியாஸ் (ராக்ஸ்டார் இயக்குநர்). என் மீது நம்பிக்கை வைத்து ராக்ஸ்டாரை என் கையில் ஒப்படைத்தற்கு. நான் உங்களை (ரசிகர்களை) தொடர்ந்து திரைப்படங்களிலேயே சந்திக்கிறேன் என்றார். தென்னிந்திய பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் உண்மையான வாழ்க்கை பின்னணியை மையமாக வைத்து உருவான 'தி டர்ட்டி பிக்சர்ஸில்', சில்க் சிமிதாவின் கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலன், சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில், இவ்விருதை ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். பெண்களை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு காண்பித்த இரவு இது என்றார்.

Tamil Gallery Updates