உறுதியானது வெங்கட்பிரபு - சூர்யா கூட்டணி!

E-mail Print PDF
User Rating: / 5
PoorBest 

மங்காத்தா படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு யாரை இயக்குகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. காரணம் வெங்கட் பிரபு எத்தனை சீரியஸான கதையும் நகைச்சுவை கலந்து பறிமாறுவதில் கில்லாடி இயக்குனர் என்ற பெயரை, 'சென்னை 28' முதலே சம்பாதித்து விட்டார். அஜித்தை வில்லனாக சித்தரித்த வகையிலும் வெங்கட்பிரபுவுக்கு நல்ல பெயர்தான். இந்நிலையில் 'மங்காத்தா' படத்தை தொடர்ந்து சூர்யாவின் பட நிறுவனமான 'ஸ்டூடியோ க்ரீன்' தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்க இருகிறார் என்ற செய்தியையும், அதில் கார்த்தி அல்லது சூர்யா நடிக்கலாம் என்ற செய்தியை முன்பே சொல்லியிருந்தோம். தற்போது வெங்கட்பிரபு இயக்க இருக்கும் படத்தின் கதை விவாதத்தை மலேசியாவில் நடத்தி முடித்திருகிறார். அங்கிருந்தே தனது இயக்கத்தில் அடுத்து நடிக்க இருப்பது சூர்யா என்பதையும், இந்தப்படம் ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் என்பதை அறிவித்து விட்டார். வெங்கட்பிரபு - சூர்யா கூட்டணி இணையும் இந்தப் படம் பற்றிக் கூறும்போது "பிதாமகன் படத்தில் சூர்யாவின் நகைச்சுவை நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு நான் இயக்க இருக்கும் புதிய படத்தில் சூர்யாவின் ஹூமர் முகத்தை முழுமையாக வெளிபடுத்த இருக்கிறேன். இது ஒரு அக்ஷன் காமெடி வகைப் படம். இதில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் மூன்று பேரையுமே அறிமுகபடுத்த விரும்புகிறோம்." என்று தெரிவித்து இருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் இசை என்பது மட்டும் தற்போதைக்கு முடிவாகி இருகிறது. அடடா... கலக்கல் கூட்டணில கால வச்சிட்டாரே... பார்ட்டிக்கு மட்டும் போயிடாதீங்க பாஸ்!

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com