புட்டுக்கிச்சா.. பிரபுதேவா-நயன் காதல்?

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருக்கிறார்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும். ஆனால் இங்கே என்னடா என்றால், ரெண்டு பேருக்கும் 'புட்டுக்கிச்சு' என்று கிசுகிசு பரப்புகிறார்கள். அதுவே செய்தியாகவும் கசிவதால் அதையெல்லாம் படித்துவிட்டு, இந்த பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று நமுட்டு சிரிப்பு சிரிக்கிறதாம் ஜோடி. நயன்தாரா மீண்டும் நடிக்கப் போகிறார் என்று வெளிவரும் செய்திகளிலும் அவ்வளவு உண்மை இல்லையாம். அவரை தேடிச் சென்று அழைக்கிற சில இயக்குநர்களிடம், யோசிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். நேரில் வருகிறவர்களிடம் முகத்தில் அடித்த மாதிரி பதில் சொல்ல முடியாதல்லவா? அதனால்தான் இப்படி ஒரு பதில். எப்படி இருக்கிறது இப்போதைய நிலவரம்? பிரபுதேவா இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் 'ரவுடி ரத்தோர்' படப்பிடிப்பு பதாமியில் நடந்து வருகிறது. அவ்வப்போது கிளம்பி பதாமிக்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா. சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கு திரும்பிவிடுகிறார். இந்த சந்திப்பும் மிக மிக சுமூகமாகவே இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, இவர்கள் இருவருமே சென்னையின் காஸ்ட்லி பகுதியான போர்ட் கிளப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும் தகவல். உண்மை இப்படியிருக்கும் போது எதற்காக திரும்ப திரும்ப இவர்களின் காதலை 'டெட்டால்' ஊற்றி கழுவிக் கொண்டேயிருக்கிறது மீடியா என்பதுதான் புரியவே இல்லை! சும்மா கௌப்பிவிட்டது சில நேரத்துல உண்மையானது மாதிரி என்னமாச்சும் நடந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல....

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com