கமலின் அடுத்த படம்?

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

கமல் இப்போது இயக்கி, நடித்து, தயாரித்து வரும் 'விஸ்வரூபம்' படப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தினை அடுத்து கமல் எந்த  படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. 'விஸ்வரூபம்' படத்தினை அடுத்து தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராக இருக்கும் 'அமர் ஹெய்ன்' என்னும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் கமல். இப்படத்தையும் அவரே இயக்கி நடிக்கவுள்ளார். இந்தி பதிப்பிற்கான தலைப்பு 'அமர் ஹெய்ன்' என்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பிற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. இப்படம் குறித்து கமல் "இந்த படத்திற்கான கதையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தயார் செய்துவிட்டேன். ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்க சரியான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. 'விஸ்வரூபம்' படத்தை முடித்த பின்னர் இப்படத்தினை இயக்கவுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் தலைவிரித்தாடும் ஊழலுக்கு எதிரான பதிவாக இப்படம் அமையும் என சொல்லப்படுகிறது. நீங்களாச்சும் நல்லா சடை பின்னுவீங்களா....?

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com