அமலா என்னை ஏமாத்திட்டா! - மாதவன்

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

ஆர்யா, மாதவன், சமீரா, அமலா பால் போன்ற நட்சத்திரங்கள் நடித்த 'வேட்டை' பொங்கல் அன்று ரிலீசாகி வெற்றி நடை போடுகிறது. ஒரு பேட்டியில் நடிகர் மாதவன், தன்னுடன் நடித்த அமலா பால் பற்றி கூறியதாவது, "அமலா பால் அழகானவர், அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் என்னை சுற்றி சுற்றி வந்தார். அப்போது என்னை 'சைட்' அடிக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அமலா பால், என்னுடைய நடிப்பை கற்றுக்கொள்வதற்காகவே சுற்றி சுற்றி வந்ததாக கூறிவிட்டார். இதனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார்" என்றார். இந்தப் படம் குறித்து மாதவன் கூறுகையில், 'வேட்டை'யில் ஆர்யாவுடன் நடித்தது ரொம்பப் பிடித்திருந்தது. தமிழில் இரண்டு ஹீரோ படங்கள் இனி நிறைய வரும் என நினைக்கிறேன். 'நண்பன்' நன்றாக வந்தது மகிழ்ச்சி. ஆனாலும் அதில் நடிக்கவில்லையே என்ற வருத்தம் துளியும் இல்லை. நடிக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். நானும், பிபாஷா பாசுவும் 'ஜோடி பிரேக்கர்ஸ்' (இந்தி) படத்தில் நடித்த போது, எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த படம் வெளி வந்து, அதைப் பார்த்த போது நாங்கள் இருவரும் அவ்வளவு பொருத்தமான ஜோடியாக தெரிந்தோம். பிபாஷாவைப்போல் தீபிகா படுகோனேயும் எனக்கு பொருத்தமானவராக இருப்பார். வேட்டையில் சமீரா எனக்கு சரியான ஜோடியாக இருந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். எப்படியோ, என்னுடன் நடிப்பவர்களுக்கு நான் பொருத்தமாக இருப்பது சந்தோஷம்தான்," என்றார். ஜோடிப் பொருத்தமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஒங்க பாடிய கொஞ்சம் குறைங்க......

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com