2011-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த படம் 'மங்காத்தா'. அஜித்தின் 50வது படம் மற்றும் 2011-ம் ஆண்டில் அதிக வசூல் அள்ளிய படம் என்ற பெருமையை பெற்றது. அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இப்படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. தயாநிதி அழகிரி தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். 2011-ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த படங்களில் 'மௌனகுரு' படத்தினை தவிர எந்த ஒரு திரைப்படமும் வரவேற்பை பெறவில்லை. 2011ம் ஆண்டில் 'மங்காத்தா' படம் தான் வசூலில் முதல் இடம் என்று கூறியதால் 'மங்காத்தா' படத்தினை இப்போது 2012-ல் மறு வெளியீடு செய்து இருக்கிறார்கள் சில திரையரங்க உரிமையாளர்கள். அதே வசூல் கிடைக்குமா
| < Prev | Next > |
|---|


