கொலைவெறி' பாடலை பள்ளிகளில் மட்டும்தான் இன்னும் ஒலிக்க செய்யவில்லை. அதைதவிர சாலைவிதி பேனர்கள், கடைகளின் விலை பட்டியல்கள் என அனைத்து இடத்திலும் இந்த வாக்கியத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஏதோ இந்த வார்த்தையையே '3' படக்குழுவினர்தான் கண்டுபிடித்தது போன்ற ஒரு பெரிய பில்டப்புடன் ஏகப்பட்ட பப்ளிசிட்டியை இந்த பாடலின் மூலம் இப்படம் பெற்றிருக்கிறது. தற்போது மற்றொரு பப்ளிசிட்டிக்காக படக்குழுவினர் கொளுத்திப் போட்ட கிசுகிசுவா அல்லது உண்மையா? என்று புரியாமல் குழம்புகிறது கோடம்பாக்கம். '3' படத்தில் இணைந்து நடிக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும், தனுஷுக்கும் இடையே நெருக்கம் ஃபெவிகால் போட்டது போல ஆகியிருக்கிற ஒரு செய்தி உலவிவருகிறது. இதனால் தனது மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் என்று கூட பார்க்காமல் புத்தாண்டு தினத்தன்று ஸ்ருதியுடன் மது விருந்தில் கலந்துகொண்டார், இதனால் ரஜினி குடும்பம் அப்செட்..
என ஏகத்துக்கு பில்டப் கொடுத்து பரவிய கிசுகிசுவுக்கு ஸ்ருதி ஹாசன் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் இவ்வாறு எழுதியுள்ளார் ஸ்ருதிஹாசன். "இந்த தகவல் முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்றது, தனுஷ் என்னுடன் நடிக்கும் சக நடிகர். ஐஸ்வர்யா எனது நெருங்கிய தோழி. இப்படிப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் வேதனைப்படுத்தும். புத்தாண்டு அன்று நான் என் தாயாருடன் கோவாவில் இருந்தேன். சினிமா நட்சத்திரம் என்றாலே வதந்திகளுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் ஏற்கனவே திருமணம் ஆன, அதுவும் எனக்கு நெருக்கமான குடும்பத்தின் உறுப்பினருடன் இப்படி இணைத்துப் பேசுவது வருத்தம் அளிக்கிறது." என்று ட்வீட் செய்துள்ளார். என்ன நடக்கிறது பெரிய குடும்பத்துக்குள் என காதுகளை விரிக்கிறது கோலிவுட். உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும். அதுவரைக்கும் பொறுத்திருப்போம். குடும்பத்துக்குள்ள எப்டியெல்லாம் கும்மியடிக்கிறாங்கய்ய்ய்யா.........
| < Prev | Next > |
|---|


