இரண்டாம் உலகத்தின் சுவாரஸ்ய க்ளைமாக்ஸ்!

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

'மயக்கம் என்ன' படத்தினை தொடர்ந்து செல்வராகவன் இயக்கி வரும் படம் 'இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா, சிவகார்த்திகேயன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் இசையமைக்கும், இப்படத்தின் படப்பிடிப்பை சத்தமில்லாமல் ஹைதராபாத்தில் நடத்தி வருகிறார் செல்வராகவன். இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல் துளிகள்: இரண்டு கதைகள் இருக்குமாம் 'இரண்டாம் உலகம்' படத்தில். ஆர்யா கதை தனியாகவும், அனுஷ்கா கதை தனியாகவும் இருக்குமாம். எப்படி இரண்டு கதைகளும் ஒரே இடத்தில் இணைகின்றன என்பது தான் படத்தின் சுவாரஸ்ய க்ளைமாக்ஸாம். ஜனவரி மாதம் இறுதியில் செல்வராகவனுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஆகையால் ஜனவரி மாதம் இறுதிவரை 'இரண்டாம் உலகம்' படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறாம் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்துள்ளது குறித்து செல்வராகவன் கூறியதாவது: "வெவ்வேறு அணியுடன் பணியாற்றுவது தவறில்லை என்று நினைக்கிறேன். 'இரண்டாம் உலகம்' படத்தின் இசை வேறு தளத்தில் இருக்கும்." என்று சொல்லியிருக்கிறார். மேலும், ஆர்யாவும் அனுஷ்காவும் இப்படத்தில் வேறு பரிமாணத்தில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil Gallery Updates