நயன்தாராதான் எனக்கு பொருத்தமானவர் - தனுஷ்

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3' என நடிகர் தனுஷ் கூறியுள்ளார். கொலவெறி பாடலுக்குப் பின் படுபாப்புலராகி, பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நடிகர் தனுஷ், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததற்கும், என் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இயக்குநர் வேலையை சிலசமயங்களில் வீட்டுக்கும் எடுத்து வருவார். அதனால் நாங்க சண்டை போட்டுக்கொண்டதுண்டு. இது, எல்லா வீட்டிலும் நடக்கிற சண்டைதான். ஐஸ்வர்யா தொடர்ந்து இனி படங்கள் இயக்குவார். ஆனால், அவர் இயக்கத்தில் நான் நடித்த முதல் படமும், கடைசி படமும் இதுதான். வெளி கம்பெனிகளுக்கு ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் இயக்குவார். இதுவரை பல நடிகைகளுடன் நடித்துவிட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்கள்தான். உடல்வாகைப் பொருத்தவரை ஜெனிலியா எனக்கு பொருத்தமானவர். மற்றபடி, 'கெமிஸ்ட்ரி' என்று சொல்கிறார்களே, அதன்படி நயன்தாரா பொருத்தமானவர். எனக்கு கிடைக்கும் பெருமைகள், விருதுகள் போன்றவற்றுக்குக் காரணம், எதையும் எதிர்ப்பார்க்காமல் நான் என் வேலையைச் செய்வதுதான். கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று சொல்வார்கள். அதன்படி, நான் என் வேலையை செய்கிறேன். எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாக செய்ய வேண்டும். என் வேலைகளை சந்தோஷமாக செய்கிறேன். கடவுளும், மக்களும் கொடுக்கும் வரவேற்பை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

Tamil Gallery Updates