3' படத்தின் 'போ நீ போ'!

E-mail Print PDF
User Rating: / 4
PoorBest 

தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் '3'. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து இருக்கும் இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஏற்கனவே 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் உலகம் முழுவதும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. அனைத்து பாடல்களும் வெளியாகி இருக்கும் நிலையில் 'போ நீ போ' என்ற பாடல் இப்போது வரவேற்பை பெற்று வருகிறது.

அப்பாடல் வரிகள் இதோ:

போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ 
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
வாழ்வேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

போ நீ போ
போ நீ போ

என் காதல் புரியலையா
உன் இஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ 
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே  போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

எப்டியோ போங்க.... ஆன ஒண்ணு இது தமிழ் பாட்டு! அது மட்டும்தான் ஆறுதல்!

Tamil Gallery Updates