குடும்பத்துடன் சிங்கப்பூரில் அஜித்!

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

நடிகர் அஜித் 'பில்லா 2' படப்பிடிப்பில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். படவேலைகள் பாதிக்கு மேல் முடிந்துள்ளன. தற்போது புத்தாண்டு தினத்தையொட்டி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இரண்டு வாரங்கள் ஓய்வுக்காக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி ஷாலினியும் மகளும் சென்றனர். மலேசியா, சிங்கப்பூரில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்கிறார். சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளார். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் குழந்தையை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் அஜித்துக்கு இருந்தது. குழந்தைக்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.