நாளை '3' பாடல் வெளியீட்டு விழா

E-mail Print PDF
User Rating: / 31
PoorBest 

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் '3'. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் உலகெங்கிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலைத் தொடர்ந்து, இப்படத்தின் பாடல் வெளியீடு குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவியது. '3' படத்தில் ரஜினியின் மகளும், கமலின் மகளும் ஒன்றிணைவதால், இப்படத்தின் பாடலை ரஜினியோ கமலோ வெளியிடக்கூடும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவ்விருவரும் பாடலை வெளியிடப் போவதில்லை எனத் தெரிகிறது. இப்படத்தின் பாடல் வெளியீடு வரும் 23-ம் தேதி மாலை 7 மணிக்கு St.George School மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஐஸ்வர்யா, '3' பாடல் வெளியீடு வழக்கமான பாடல் வெளியீடு போலில்லாமல் வித்தியாசமான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறாராம். எனவே, நிகழ்ச்சி பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பாடப் போகும் 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடலைக் கேட்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அப்போ... நாளைலயிருந்து கொல வெறி அதிகமாகப் போகுது......!