ரயில் நிலையத்தில் தனுஷை படுத்தியெடுத்த ரசிகர்கள்!

E-mail Print PDF
User Rating: / 3
PoorBest 

ரசிகர்களின் கோரிக்கைக் கிணங்க மும்பை ரயில் நிலையத்தில், 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடலை நடிகர் தனுஷ் பாடினார். நடிகர் தனுஷ் நடித்து வெளி வர உள்ள படம் '3'. ஐஸ்வர்யா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் படத்தில் இடம்பெறும் 'ஒய் இஸ் திஸ் கொலவெறிடி' பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. தமிழே தெரியாத நபர்களும், இந்த பாடலை முணுமுணுத்தபடி செல்கின்றனர். பலர் தங்களுடைய செல்போன்களிலும் இந்த பாடலை ரிங்டோனாக வைத்துள்ளனர். மும்பையிலும் கொலவெறி பாடல் அனைத்து தரப்பினரிடையேயும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சர்ச்கேட் ரயில் நிலையத்துக்கு வந்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த இளம் பெண்கள் உள்பட ரசிகர்கள், ரயில் பயணிகள் கூட்டமாக கூடினர். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கொலவெறி பாடலை பாடும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தனுஷ் கொலவெறி பாடலை பாடினார். அந்த பாடலுக்கு இளம் பெண்களும், ரசிகர்களும் ஆட்டம் போட்டனர். பின்னர் தனுஷ் ஓவல் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். ம்ம்ம்..... சார் ஒங்களுக்காக இப்பவே ஏகப்பட்ட பேரு கொலவெறியோட இருக்காங்க போல.......

Tamil Gallery Updates