விக்ரமை மிஸ் பண்ணமாட்டேன்.. மீண்டும் சோர்வோம்: சுசீந்திரன்

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

நான் பார்த்த நடிகர்களிலேயே அற்புதமான நடிகர், விக்ரம் தான் என்று கூறியுள்ளார் டைரக்டர் சுசீந்திரன். யதார்த்தமான படங்களை கொடுத்து, சில படங்களிலேயே தனக்கென ஒரு பெயரை தக்க வைத்து கொண்டவர் டைரக்டர் சுசீந்திரன். இவர் இப்போது விக்ரமை வைத்து 'ராஜபாட்டை' என்ற படத்தை எடுத்துள்ளார். இன்னும் சில தினங்களில் இப்படம் ரிலீசாக இருக்கிறது. விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை சுசீந்திரன் நம்மிடம் கூறுகையில், நான் பல நடிகர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் நான் எதிர்பார்க்கும் விஷயத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய, அற்புதமான ஒரே நடிகர் விக்ரம் மட்டும்தான். படத்தின் காட்சிகளை நான் அவரிடம் கூறும்போது, அதை அப்படியே உள்வாங்கி கொண்டு, ஒரே டேக்கில் நடித்து கொடுத்துவிடுவார். அவரிடம் நான் ஆச்சரியப்பட்ட இன்னொரு விஷயம் டப்பிங்கின் போது, படத்தில் ஒரு காட்சியின் வசனத்தை பலவிதமான குரலில் பேசி அமர்க்களப்படுத்திவிட்டார். அப்போதுதான் விக்ரம், ஒரு மிகப்பெரிய கலைஞன் என்பதை உணர்ந்தேன். இப்படி ஒரு நடிகர்கூட வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் யார் தான் மிஸ் பண்ணுவாங்க...? மீண்டும், விக்ரம் சாரும், நானும் இன்னொரு படத்தில் சேர்ந்து பணியாற்றுவோம். அதுபற்றிய அறிவிப்போடு விரைவில் சந்திப்போம் என்றார். நில ஆக்கிரமிப்பு பிரச்சினையை மையப்படுத்தி 'ராஜபாட்டை' படம் எடுக்கப்பட்டு இருந்தாலும், இப்படம் பக்கா கமர்ஷியல் படமாகும். கூடவே ரீமா சென் மற்றும் ஸ்ரேயாவின் கிளாமர் விருந்தும் உண்டு. அதான..... என்னடா புகழ் மாலை ரொம்ப வெயிட்டாயிருக்குதேனு பார்த்தோம்.......

Tamil Gallery Updates