கவிப்பேரரசுக்கு கலைஞானி தந்த பெருமை வாய்ந்த பரிசு!

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

நடிகர் கமல்ஹாசனுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் எப்போதுமே ஒரு நட்பு உண்டு. அந்த வகையில் தனது படங்களில் வைரமுத்துவுக்கு தவறாமல் பாடல கொடுத்து வருகிறார் கமல். இப்போதுகூட 'விஸ்வரூபம்' படத்தில் ஒரு பாடல் எழுத சொல்லியிருக்கிறார். தான் சொன்னது போலவே அவர் அற்புதமாக எழுதிக்கொடுத்ததால் வியந்து போனாராம் கமல். அதோடு ஒரு பேனாவை கமல் பரிசளித்திருக்கிறார். அது சாதாரண பேனா அல்ல. இத்தாலியின் எரிமலை குழம்பிலிருந்து தயாரிக்கப்பட்டதாம். ஜி8 மாநாட்டில்கூட இந்த பேனாவில்தான் கையெழுத்துப்போடுவார்களாம் உலக தலைவர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த பேனாவை வைரமுத்துவுக்கு பரிசளித்திருக்கிறார் கமல். கலைஞானி தந்தா அது எப்பவும் பெஸ்ட்டா தான் இருக்கும்!

 

Tamil Gallery Updates