அமலா பாலுக்காக ஆயிரம் பார்பி கேர்ள்ஸ்!

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

காதல் கதையில் அமலா பால் பார்பி கேர்ள் போல் மேக்கப் அணிந்ததால் ஆயிரக்கணக்கில் பார்பி கேர்ள் பொம்மை வாங்கியதாக கூறினார் இயக்குநர். அதர்வா, அமலா பால் நடிக்கும் படம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. இப்படம் பற்றி இயக்குநர் எல்ரெட் குமார் கூறியதாவது: இளம் காதல் ஜோடிகளின் கதையாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக 'ஒருமுறை' என்ற ஒரு பாடல் மட்டுமே அடங்கிய சிடி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் வெளியிடப்பட்டது. முழு தொகுப்பும் அடங்கிய பாடல் கேசட் சென்னையில் வெளியிடப்பட்டது. இயக்குநர் கௌதம் மேனன், கே.வி.ஆனந்த் வெளியிட்டனர். அமலா பாலுக்கு இப்படத்தில் பார்பி கேர்ள்போல் மேக்கப் அணிவிக்கப்பட்டது. அவருக்கு காதல் பரிசு வழங்கும் காட்சிக்காக ஏராளமான பார்பி கேர்ள் பொம்மைகள் வாங்கப்பட்டன. இந்த காட்சியை பிரபலப்படுத்தும் வகையில் காதல் திருவிழா என்ற தலைப்புடன் பாடல் கேசட் விழா நேற்று நடத்தப்பட்டது. விழா நடக்கும் அரங்கு முழுவதும் ஆயிரக்கணக்கில் பார்பி கேர்ள் பொம்மைகள் வாங்கி அலங்கரிக்கப்பட்டது. அழைப்பிதழிலும் பார்பி கேர்ள் பொம்மை வைத்து வழங்கப்பட்டது. ஒரு அழகு பொம்மைக்கு ஆயிரம் பொம்மைகள் பரிசா....அதிர்ஷ்டக்காரிதான்?!

Tamil Gallery Updates