இப்போதைக்கு திருமணம் இல்லை! - சினேகா

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை சினேகாவுக்கும் இடையே உள்ள காதலை அதிகாரப் பூர்வமாக சில நாட்களுக்கு முன்பு தனது பி.ஆர்.ஓ மூலம் பிரசன்னா செய்தி வெளியிட்டிருந்தார். ஆனால் இதுகுறித்து சினேகா எதுவும் பேசாமல் இருந்தார். தற்போது தனது காதலைப் பற்றி கூறியிருக்கும் சினேகா, பிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை. காலதாமதமாகும். என்று கூறியிருக்கிறார். இந்த ஜோடியின் காதலை முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நடிகர் பிரசன்னாதான். இதுகுறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்த சினேகாவிடம், சமீபத்தில் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டபோது, "உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டோம். கொஞ்சம் காலதாமதமாகும். என்று கூறினார். தற்போது ரஜினியின் 'கோச்சடையான்' படத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருப்பதால், இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கும் நிலையில் சினேகா இல்லையாம்.

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com