தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலை வெறிடிஷ என்ற பாடலுக்கு தங்க மெடல் பரிசாக கிடைத்துள்ளது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கி வரும் படம் '3'. இந்த படத்தில் தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலைவெறிடி' என்ற பாடல் யூடியூப்பில் வெளியாகி, ஒரே வாரத்தில் அதிகப்படியான நேயர்களால் கண்டுகளிக்கப்பட்ட பாடல் என்ற சிறப்பினை பெற்றிருக்கிறது. இதன்காரணமாக, இதை பாராட்டி அந்த பாடலுக்கு யூடியூப் நிறுவனம் தங்க மெடல் பரிசளித்துள்ளது. கிராமிய மெட்டு, ஆங்கில மொழிக்கலவை, படம் பிடித்த விதம் உள்பட பல விசயங்களையும் இந்நிறுவனம் பாராட்டியிருக்கிறது. அதற்காக மேலுமொரு வெண்கல பதக்கமும் இப்பாடலுக்கு கிடைத்திருக்கிறது. என்ன கொலவெறி சார் ஒங்களுக்கு.............?
| < Prev | Next > |
|---|


