3' படத்திலிருந்து நானா விலகல! - அமலா பால்

E-mail Print PDF
User Rating: / 6
PoorBest 

ஆர்யா ஜோடியாக 'வேட்டை', அதர்வா ஜோடியாக 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' என அமலா பால் செம பிஸி. ஹரி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் நடிக்கும் '3' படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகினார்கள். கால்ஷீட் தேதிகள் இல்லை என அவர் மறுக்க, அப்படத்திற்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அமலா பால். பின்னர் அமலா பால் கால்ஷீட் தேதிகள் சரிவரவில்லை  என்பதால் '3'ல் தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசனே நடிப்பார் என அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு '3' படத்தில் இருந்து விலகியது குறித்து அமலா பால் "கால்ஷீட் தேதிகள் குழப்பம் ஆகற அளவுக்கு நான் பிஸியா பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தேன். இப்போது 'வேட்டை', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' இந்த ரெண்டு படங்கள்ல மட்டுமே என் முழு கவனமும். அடுத்ததாக நடிக்கப் போற படங்கள் பத்தி பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. நான் நடிச்ச படங்களோட தயாரிப்பாளர்கள் யாரும் நான் ஷூட்டிங்குக்கு லேட்டா வந்ததா சொல்ல முடியாது.. சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்ல இருப்பேன். நான் '3' படத்தோட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கிட்டேன். நான் அந்த படத்திலிருந்து விலகல. என்னுடைய தேதிகள் பிரச்சினை இல்லை. என்ன பிரச்சினைங்கறது படக்குழுவுக்கு தெரியும். '3' படம் முடியும் நிலையில் இருக்கு. அதனால, அது பத்தி பேசறது சரியா இருக்காது" என்று தெரிவித்துள்ளார். அட.. மைனாவ இப்டி முணங்க வச்சிட்டாங்களே....

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com