நயன் பிறந்தநாளுக்கு திருமண தேதியை பரிசாகத் தருவாரா பிரபுதேவா?

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

நயன்தாரா பிறந்த நாளான நவம்பர் 18-ம் தேதி அவருக்கும் பிரபு தேவாவுக்கும் நடக்கவிருக்கும் திருமணதேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் வரும் பிப்ரவரியில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 14ம் தேதி திருமணம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நயன்தாராவின் பிறந்த நாளான நாளை 18-ம் தேதி திருமணத் தேதி அறிவிக்கப்படும் என்று இப்போது கூறத் தொடங்கியுள்ளனர். 'வில்லு' படத்திலிருந்து, நயன்தாராவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் காஸ்ட்லி பரிசு கொடுத்து அசத்துவது பிரபுதேவா ஸ்டைலாம். இந்த ஆண்டு பிறந்த நாளுக்கு திருமண தேதி அறிவிப்புதான் சிறப்புப் பரிசு போலிருக்கிறது! மெகா சைஸ் அல்வா குடுக்காமலிருந்தா தேவல........

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com