ஜெனிலியாவுக்கு டோலிவுட்டில் தடை!

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

ஜெனிலியாவுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நடிக்க தடை விதித்துள்ளது. தெலுங்கு நடிகர் சங்கத்தில் அனைத்து நடிகர்களும் உறுப்பினராக வேண்டும் என்று சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டது. உறுப்பினராகாதவர்களுக்கு நடிக்க தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதையடுத்து நடிகர்- நடிகைகள் பலரும் உறுப்பினராக பதிவு செய்தனர். அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் உறுப்பினராக சேர்ந்தனர். ஆனால் ஜெனிலியா உறுப்பினராக சேரவில்லை. அவருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து தெலுங்கு நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று அவசரமாக கூடினர். ஜெனிலியா தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த தீர்மான நகல் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுப்படங்களில் ஜெனிலியாவை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜெனிலியா தமிழில் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானார். 'சச்சின்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். விஜய்யுடன் நடித்த 'வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது மூன்று இந்திப் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். குட்டிக்கு கொழுப்பு கொஞ்சந்தாங்க இருக்கு...........