தீக்ஷாவை விட அனுஷ்காதான் பெஸ்ட்; விக்ரம் பளிச் பதில்

E-mail Print PDF
User Rating: / 2
PoorBest 

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ராஜபாட்டை' படம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விக்ரமுக்கே ஒரு ரிலாக்ஸ்தான். கோடம்பாக்கத்தின் அடுத்த கமல் என்கிற அளவுக்கு தனது உடம்பை தானே பஞ்சராக்கிக் கொள்பவர் விக்ரம். ஏர் பில்லோ மாதிரி, தேவைப்படும் போதெல்லாம் உப்பவும், குறையவும் தெரிந்த மனிதர். இந்த ஒரு குவாலிடிக்காகவே அவரை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள் தமிழ்ப்பட இயக்குநர்கள். பக்கா மாஸ் கமர்ஷியல் படம் இது என்று வார்த்தைக்கு வார்த்தை தனது படத்தை வர்ணிக்கும் சுசீந்திரன்கூட, விக்ரமை இந்த படத்தில் நடிக்க வைக்க முயன்றபோது முதலில் சொன்ன வார்த்தை, பத்து கிலோ வெயிட் போடணுமே என்பதுதானாம். அடுத்த சில நாட்களில் சுசீந்திரன் சொன்ன மாதிரியே வந்து நின்றாராம் விக்ரம். 'தில்', 'தூள்', 'சாமி' மாதிரி முழு கமர்ஷியல் படத்தில் நடிக்கணும்னு எனக்கு நிறைய ஆசை. ஆனால் அது வெறும் கமர்ஷியல் மசாலாவா இல்லாமல் நல்ல கதையோடும் இருந்தால்தான் மரியாதை. அந்த மாதிரி ஒரு கதைக்காக காத்திருந்த போதுதான் சுசீந்திரன் வந்து இந்த கதையை சொன்னார்.

அவருடைய முந்தைய படங்களையெல்லாம் பார்த்தவர்கள் இந்த படத்தை பார்த்தால் இது சுசீந்திரன் படம்தானா என்பதை நம்பவே மாட்டார்கள். அவருக்குள் அப்படியொரு கமர்ஷியல் டைரக்டர் இருக்கிறார். அஃப்கோர்ஸ், அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இப்படியெல்லாம் படம் எடுக்கணும் என்ற ஆசையில்தான் வந்தாராம். அப்புறம்தான் தனக்கென்று ஒரு தனித்தன்மை வரணும் என்பதற்காக வேற ரூட்ல அறிமுகமாகியிருக்கிறார் என்று சுசீந்திரனுக்காகவும் சேர்த்து பேசுகிறார் விக்ரம். இந்த படத்தில் எனக்கு வேலையே இல்லை. ஐந்து பாட்டு, நாலு பைட், என்று படத்தின் பாதியை நடன இயக்குநரும், ஸ்டன்ட் இயக்குநரும் பிரித்து எடுத்துக் கொண்டார்கள் என்று சுசீந்திரன் சொன்னதை கேட்கவே கஷ்டமாக இருந்தது. முந்தைய படமான 'தெய்வத்திருமகள்' படத்தில் விக்ரமுக்கு அனுஷ்கா ஜோடி, 'ராஜபாட்டை'யில் தீக்ஷா சேத் ஜோடி. இதில் யார் பெஸ்ட்? இந்த கேள்வியை காதில் வாங்கும்போதே முகமெல்லாம் ஸ்பிலிட் ஏ.சி யாகிறது விக்ரமுக்கு. தீக்ஷாகிட்ட வேணும்னா அனுஷ்கா அளவுக்கு அழகு இருக்கலாம். ஆனால் நடிப்புல அனுஷ்கா இடத்தை பிடிக்க இன்னும் சில படங்களில் அவர் நடிச்சு அனுபவத்தை சேகரிக்கணும்.. என்றார் விக்ரம். தூள்..... சாமி! ஒங்க தில்லு தில்தான்!!

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com