செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மயக்கம் என்ன' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, இன்று காலை மிர்ச்சி பண்பலை மூலம் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குநர் செல்வராகவன், தனுஷ், ரிச்சா, இப்படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள், அதனுடன் ஒரு தீம் மியூசிக் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கான பாடல்களை தனுஷும், செல்வராகவனும் எழுதியிருக்கிறார்கள். 'பிறை தேடும்...' என்ற பாடலும் 'காதல் என் காதல் அது கண்ருல போச்சு.. அது போச்சு...' என்ற பாடலை தனுஷ் எழுதியுள்ளார். "ஓட ஓட ஓட தூரம் குறையல... பாட பாட பாட பாட்டு முடியல... போக போக போக ஒண்ணும் புரியல.. ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல" என்ற பாடலை தனுஷ்-செல்வராகவன் கூட்டணி எழுதியிருக்கிறது. மீதமுள்ள இரண்டு பாடல்களை செல்வராகவன் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக இசை விநியோகத்தில் இறங்கியுள்ளது பிரபல கலர் லேப் நிறுவனமான ஜெமினி. "தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி ஆடியோ கடைகளிலும் இப்படத்தின் பாடல் சிடி இன்று முதல் கிடைக்கும்" என்று இப்படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கூறியுள்ளார். ரசிகர்களுக்கு ஏதாச்சும் விளங்குமா......?
| < Prev | Next > |
|---|


