சுசீந்திரனின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'ராஜபாட்டை'. இப்படத்தில் கதாநாயகியாக தீக்ஷா சேத் நடிக்கிறார். இவர் இருக்க, எதற்கு பத்து கதாநாயகிகள் என்று கேட்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்னும் இரண்டு பாடல் காட்சிகளும், இரண்டு சண்டை காட்சிகளும் பாக்கி இருக்கிறதாம். இதுவும் முடிந்து விட்டால் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விடுமாம். இதில் ஒரு பாடல் முக்கியமான காட்சியை அடுத்து வருகிறது. அதனால் அப்பாடலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இப்பாடலில் 10 பிரபல நடிகைகள் ஆடினால் நன்றாக இருக்கும் என்று சுசீந்திரன் கருதுகிறார். அதற்காக நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம். இந்த பத்து நடிகைகளுக்காகத்தான் இப்போது விக்ரம் காத்திருக்கிறார். மாம்ஸ்.... பலே அதிர்ஷ்டசாலிதான்!
| < Prev | Next > |
|---|


