எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் கூறியுள்ளதால், தான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் எஸ்.பி.பி.சரண், தனக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார். வெங்கட் பிரபு அண்ட் டீம் எத்தனையோ பார்ட்டிகளை நடத்தியிருப்பார்கள். அவர்களுடைய சமீபத்திய 'மங்காத்தா' பார்ட்டி அவர்களை ரொம்பவே திக்குமுக்காட வைத்துவிட்டது. எல்லாம் சோனா கைங்கேரியம்தான். விரைவில் எஸ்.பி.பி.சரணை போலீஸ் கைது செய்ய கூடும் என்ற நிலை இருந்தாலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று சோனாவை சந்தித்து ஆறுதல் கூறினாராம். மேலும் பார்ட்டியில் நடந்ததை கேட்டு தெரிந்துகொண்டவர். என் பையனை உன்கிட்ட வந்து மன்னிப்பு கேட்க சொல்றேம்மா என்று கூறியிருக்கிறாராம். இதனால் சரண் மீது சோனா கொடுக்கப்பட்ட கேஸ் வாபஸ் பெறவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இந்த பிரச்சினை குறித்து வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து டோஸ் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் இந்த பார்ட்டி 'மங்காத்தா' பார்ட்டியே அல்ல என்று ட்விட்டர் இணையதளத்தில் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். விருந்தில் பங்கேற்ற அனைவரிடமும் விசாரணை நடத்திய பின், அச்சம்பவம் உண்மையாக இருந்தால் எஸ்.பி.பி.சரண் கைது செய்யப்படுவார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து எஸ்.பி. பி.சரண், சோனாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மனுவில் குறிப்பிட்டு இன்று, முன்ஜாமீன் தாக்கல் செய்தார். தென்னைய பெத்தா இளநீரு.. பிள்ளைய பெத்தா கண்ணீரு.......
| < Prev | Next > |
|---|


