'மங்காத்தா'வின் வெற்றிக்கு பிறகும் அமைதியாக இருக்கிறார் அஜித். தனது அடுத்த படமான 'பில்லா 2' படத்தில் ஆர்ப்பாட்டமின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது 25-வது படமான 'அமர்க்கள(மு)ம்', இவரது 50-வது படமான 'மங்காத்தா'வும் வெற்றி பெற்ற மகிழ்ச்சி துளியும் பாதிக்காதது போல் இருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்பது போன்று சினிமா உலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இது குறித்து அஜித்திடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது, "தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஏகலைவன் போல இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர் ஸ்டாரை நான் தூரத்தில் இருந்து ரசித்தபடியே, படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். அவர் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் அடிவாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று எனது சினிமா பயணம் ஒரு முழுமையை அடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். 'மங்காத்தா'வின் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்", என்றார். வைரமேயானாலும் தங்கத்தோட சேர்ந்தாதான் அழகுனு புரியாதவரா..........?
| < Prev | Next > |
|---|


