நடிகர் தர்ஷன் விவகாரத்தில் நடிகை நிகிதாவுக்கு கன்னட மொழிப் படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். கன்னட நடிகர் தர்ஷன் அவரது மனைவி விஜயலட்சுமியை கொல்ல முயன்றதாக சமீபத்தில் போலீசில் புகார் செய்யப்பட்டார். இதில் அவரை போலீஸ் கைது செய்ததது. தனக்கும் தன் கணவனுக்கும் இந்த அளவு தகராறு ஏற்பட நடிகை நிகிதாதான் காரணம் என்று விஜயலட்சுமி கூறியதால், நிகிதா மீது நடவடிக்கை எடுத்தது கன்னட தயாரிப்பாளர் சங்கம். நிகிதா 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்கக் கூடாது என தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவை நிகிதா கடுமையாக எதிர்த்தார். நிரபராதியான தன் மீது வீண் புகார் சுமத்தி, தடை விதித்துவிட்டதாகவும், இதனால் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முறையிட்டார் நிகிதா. அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பெரும் ஆதரவளித்தனர். கன்னட இயக்குநர்கள், நடிகர்கள், தெலுங்கு தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் தடை உத்தரவை எதிர்த்தனர். இந்தத் தடையை மீறி அவரை வைத்து படங்கள் எடுப்போம் என்றும் கூறினர்.
தமிழில் குஷ்பு உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நிகிதாவுக்கு ஆதரவு அளித்தனர். கன்னட நடிகர் சங்கம் நடிகை நிகிதாவை முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இந்த தடை உத்தரவை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது கன்னட தயாரிப்பாளர் சங்கம். ஆனால் அதைச் செய்யும் முன் தான் நிரபராதி, தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என நிகிதா ஒரு கடிதம் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதனை நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் ஏற்கவில்லை. எனவே கடிதம் கொடுக்காமல் உள்ளார் நிகிதா. இந்த நிலையில் கன்னடத்தின் மூத்த நடிகர் அம்பரீஷை இந்த விவகாரத்தில் தலையிடுமாறு நடிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போது மலேஷியாவில் உள்ள அம்பரீஷ் இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் பேசியுள்ளார். நாளை மறுநாள் அவர் பெங்களூர் திரும்பியதும் இந்தத் தடை உத்தரவு நீக்கப்படும் என தெரிகிறது. அட போங்க சார்.... சில நயன்தாராக்களுக்கு ஒரு பாடமாயிருக்கும்னு நெனச்சோம்.. அதுக்குள்ள இப்டி பண்ணிட்டீங்களே.......
| < Prev | Next > |
|---|


