இனி வயசுக்கேத்த கேரக்டர் : அஜித் அதிரடி முடிவு!!

E-mail Print PDF
User Rating: / 22
PoorBest 

இனி தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடிக்க நடிகர் அஜித் முடிவெடுத்திருக்கிறாராம். மங்காத்தா படத்தில் அஜித் தனக்கு 40 வயது என்பதை வெளிப்படையாக சொல்லி ரசிகர்களின் கரகோஷம் வாங்கியிருந்தார். அதேபோல அந்த வயதுக்கேற்ற நரைமுடி, நரை தாடியுடன்தான் படம் முழுக்க வந்தார். இந்த நிஜ தோற்றம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டதாலும், பலரும் பாராட்டியிருப்பதாலும், இனி வயதுக்கேற்ற கேரக்டரில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித்.

மேலும் மங்காத்தா படத்தின் கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும், படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கு ஒரு முறை மாஸ் ஹீரோ இமேஜை விட்டுவிட்டு இதேபோன்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவையும் அஜித் எடுத்திருக்கிறாராம். தற்போது பில்லா இரண்டாம் பாகத்தில் நடித்துகொண்டிருக்கும் அவர், தனது அடுத்த படத்திற்காக இரண்டு இயக்குநர்களை மனதில் வைத்திருக்கிறாராம். அதில் ஒருவர் ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாராஜா, மற்றொருவர் ஜெயம்கொண்டான் இயக்குநர் கண்ணன். இவர்களில் யாராவது ஒருவருக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுப்பார் என்கிறது கோடம்பாக்கத்து தகவல்

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com