மங்காத்தாவில் அஜீத் ரொம்ப ரொம்ப கெட்டவன் : வெங்கட் பிரபு பேட்டி

E-mail Print PDF
User Rating: / 3
PoorBest 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான மங்காத்தா, இம்மாதம் 30ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகவும், படத்தில் அஜீத் ரொம்ப ரொம்ப கெட்டவன் என்று படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ‌கூறியுள்ளார். க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத், அர்ஜீன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆன்டிரியா, வைபவ், பிரேம்ஜி அமரன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் மங்காத்தா. இதுவரை நடித்திராத வித்யாசமான ரோலில் அஜீத் நடித்திருக்கிறார். கூடவே அஜீத்திற்கு இது 50வது படமும் கூட, அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. பாட்டும் நன்றாக வந்துள்ளது. கூடவே சி.டி., கடைகள் அனைத்திலும் மங்காத்தா பாடல்கள் தான் அதிகளவுக்கு விற்பனையாகியும் உள்ளது. படத்தை பற்றி வெங்கட் பிரபு கூறுகையில், பொதுவாக என்னுடைய படங்கள் அனைத்தும் கிரிக்கெட்டோடு தொடர்புடையவை. அதேபோல் மங்காத்தா படமும் கிரிக்கெட் பின்னால் நடக்கும் சூதாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜீத், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட ஐந்து பேர் கெட்டவர்கள். அதில் அஜீத் ரொம்ப ரொம்ப கெட்டவர். முதன்முறையாக இந்தபடத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையான வேடத்தில் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இது அஜீத்தின் பொன்விழா படம். அஜீத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிந்தும் அர்ஜூன் பெருந்தன்மையுடன் நடிக்க ஒப்புக் கொண்டார்

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com