'555'யுடன் பிறந்தநாள் கொண்டாடிய பரத்!

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். நேற்று அவர் தனது 30-வது பிறந்த நாளை '555' படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். 'பாய்ஸ்' படத்தை அடுத்து பாலாஜி சக்திவேலின் 'காதல்' படம் இவருக்கு ஒரு அங்கீகரத்தை பெற்றுத்தந்தது. வசந்த பாலனின் 'வெயில்' தமிழில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்தது. 'கூடல் நகர்', 'எம்மகன்', 'பழனி', 'கண்டேன் காதலை' என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது '555', 'யுவன் யுவதி', 'திருத்தணி', 'அரவான்'(கௌரவ வேடம்) ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். வாழ்த்துகள் யுவன்... இந்த வருஷமே நல்ல யுவதி கிடைக்கட்டும்....

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com