தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தமிழ் சினிமா பிரமுகர்கள் பலரும் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுகாத குறையாக அவரிடம் சென்று ஆசி பெற்றும், வாழ்த்து சொல்லியும் வருகின்றனர். ஆனால் அஜித் மட்டும் எப்பவும் போல, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க போகாதது ஏன்...? என்பதற்கு பதில் அளித்துள்ளார். 'மங்காத்தா' படம் ரிலீசுக்கான வேலைகளில் பிஸியாக இருந்து வரும் அஜித், கடந்த சில வாரங்களாக ஆங்கில சேனல்கள் சிலவற்றிற்கு மட்டும் பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் ஒரு டி.வி., பேட்டியின் போது, ஏன்...நீங்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க போகவில்லை என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அஜித், முதல்வர் அவர்கள் எந்த அளவுக்கு பிஸியாக இருப்பார் என்று எனக்கு தெரியும். தேவையில்லாமல் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரை நான் சந்திக்க போகவில்லை. அப்படியே நான் போய் பார்த்தாலும், தேவையில்லாமல் ஆயிரம், ஆயிரம் கேள்விகள் வரும். 'மங்காத்தா' படத்தை எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் செய்யத்தான் அஜித் போய் முதல்வரை சந்தித்தார் என்று பலரது விமர்சனத்துக்கு நான் ஆளாவேன். இதெல்லாம் எனக்கு தேவையா. என்னைப்பற்றி முதல்வர் அவர்களுக்கு நன்றாக தெரியும். எது உண்மை, எது பொய் என்பதை அவர் நன்கு உணர்ந்தவர். எனவே என்னைப் பற்றி குறை கூறுபவர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. இவர்கள் என்ன, எனது அடுத்த படத்தை தயாரிக்கவா போகிறார்கள்...? என்றார். எப்புடி.... சாமர்த்தியமா நழுவிட்டாருல்ல.....!
| < Prev | Next > |
|---|


