ரசிகர்கள் மோசமான அஜித்தைதான் பார்க்கப்போகிறார்கள்: அஜித்

E-mail Print PDF
User Rating: / 4
PoorBest 

தற்போது தாம் நடித்து முடித்துள்ள 'மங்காத்தா' படம் குறித்து நடிகர் அஜித் அளித்த பேட்டி ஒன்றில், "நான் நடித்த முதல் படத்துக்கு எந்த அளவுக்கு உழைத்தேனோ அதே அளவு தான் 'மங்காத்தா'வுக்காகவும் உழைத்து இருக்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். நான் இதுவரை பணியாற்றிய இயக்குநர்களில் வெங்கட்பிரபு சிறப்பு மிக்கவர். படக்குழுவினர் எல்லாரிடமும் அவர் மரியாதையுடன் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்தி வழிநடத்துவதில் திறமை மிக்கவர். இப்படத்தில் வெள்ளை முடியுடன் நடித்து இருப்பது, அந்த கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டது. அவ்வாறு நடிப்பதில் எனக்கு எவ்வித பயமும் கிடையாது. படத்தில் எனது பெயர் விநாயக் மாதவன். அவனுக்கு பணம்தான் எல்லாமே. நீங்கள் படத்தில் ஒரு மோசமான அஜித்தை தான் பார்க்க இருக்கிறீர்கள். வெங்கட்பிரபு என்னிடம் கதையைக் கூறும் போது, 'படத்தில் 5 பேர் இருக்கிறார்கள். 4 பேர் கெட்டவர்கள், ஒருவர் மிகவும் கெட்டவன் என்றார். அந்த பாத்திரத்தில்தான் நான் நடித்து இருக்கிறேன். எனது கதாபாத்திரத்தை போராளி அல்லது எதிரி என எப்படி வேண்டுமானாலும் அழைக்காலம். நீண்ட காலத்துக்குப் பிறகு என் சினிமா வாழ்க்கையில் ரசித்து நடித்த கதாபாத்திரம் இது. என்னால் இயன்ற வரையில் கடின உழைப்பை செலுத்தியிருக்கிறேன். அதனை இயக்குநர் வெங்கட் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார்," என்றார் அஜித். 'பில்லா-2' படம் குறித்த கேள்விக்கு "நாங்கள் முந்தைய பாகத்தை உருவாக்கி வருகிறோம். இது, உண்மையில் மிக அரிதான விஷயம். பில்லா என்பது இப்போது ஒரு பிராண்ட் ஆகிவிட்டது. எப்படி பில்லா உருவானான் என்பதை அறிய பல பேர் ஆவலாக இருக்கிறார்கள். அதை தான் இந்த படம் மூலம் கூற போகிறோம்," என்று கூறினார். "நான் எப்போதுமே ஒரு நடிகராக மட்டுமே இருக்க விரும்புகிறேன். நட்சத்திரம் என்று அழைக்கப்படுவது எல்லாம் ரசிகர்களால்தான். இதன் காரணமாக என் வாழ்க்கை முறையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடாது. 50 படங்களுக்கு முன்பு இருந்த அஜித்தைதான் இப்போதும் பார்க்கிறேன்," என்றார் அஜித். 'தல'க்கு எப்பயும் தலைக்கனமே இருக்காது போலயே........

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com