ரஜினியை ஆஸ்பத்திரியில் பார்த்து பலர் உடல்நலம் விசாரித்தனர். நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, விஜயகாந்த் போன்றோரும் பார்த்தனர். இவர்களுடன் நடிகர் கமலஹாசனும் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். திரையில் ரஜினியும், கமலும் எதிரும் புதிருமாக இருந்தாலும் சினிமாவுக்கு பின்னால் நெருக்கமான நண்பர்கள். பொது இடங்களில் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்வர். ஒரு கட்டத்தில் சினிமா சரிப்படாது என்று பெட்டி படுக்கையுடன் ரஜினி ஊருக்கு கிளம்பியபோது கமல்தான் தடுத்து நிறுத்தினார், என்று திரையுலக பிரபலங்கள் பேசுவது உண்டு. இருவரும் ஆஸ்பத்திரியில் சந்தித்துக் கொண்டபோது பழைய நினைவுகளில் மூழ்கினார்கள். உணர்வுப்பூர்வமாக எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ரஜினி விரைவில் பூரண குணமடைய கமல் வாழ்த்தினார். ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் கமல் போட்டியாக நினைப்பது உண்டு. உங்கள் படத்தை பார்க்கும் போதெல்லாம் நான் போட்டியாளனாக மாறி விடுகிறேன். என் படத்தையும் சிறப்பாக கொடுக்கவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கிறேன்.
எனது அடுத்த படத்துக்கு 'ராணா'வைதான் போட்டியாக நினைத்துள்ளேன். குணமடைந்து திரும்பியதும் 'ராணா' படத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் ரஜினியிடம் கமல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திப்பு குறித்து கமல் தனது நெருக்கமான நண்பர்களிடம் ரஜினி விரைவில் குணமடைந்து திரும்பி 'ராணா' படத்தில் நடிப்பார் என்று கூறி வருகிறார். 'ராணா' படத்தில் நடிக்க ரஜினிக்கு முதல் தவணையாக ரூ.24 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கிடைக்குமாம். ரஜினியின் மகள் சவுந்தர்யாவும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி என்பது இப்படம் மூலம் நிரூபணமாகி உள்ளது என்கின்றனர். கலைஞானிக்காகவாவது சூப்பர் ஸ்டார் மீண்டும் நடிக்கணும்னு வேண்டிக்கோங்கப்பா......
| < Prev | Next > |
|---|


