சினிமாவை விட்டே விலகி விடுவேன்: ஐஸ்வர்யா ராய்

E-mail Print PDF
User Rating: / 2
PoorBest 

நான் ஒரு குடும்பப் பெண். நிர்வாணமாக நடிக்க மாட்டேன். அதைவிட சினிமாவை விட்டே விலகிவிடுவேன், என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். மதுர் பண்டார்கர் இயக்கும் ஹீரோயின் என்ற படத்தில் ஒரு காட்சியில் நடிகை ஐஸ்வர்யாராய் நிர்வாணமாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும் இதற்கு அவர் கணவரும் ஒப்புக் கொண்டதாகவும் மும்பை டி.வி.சேனல் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாளிதழ்கள் மற்றும் இணைய தளங்களிலும் இந்த செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அவர் கூறுகையில், "நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம் உடைந்து போனேன். நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும், ஒரு குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன். என் மாமியார் வீட்டுக்கென கவுரவம் இருக்கிறது. என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர். அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எனக்குள்ள கலை ஆர்வத்தை புரிந்து கொண்டுதான் திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இதுவே பெரிய விஷயம். இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும் செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான் விலகி விடுவேன்," என்றார். ஒரேடியா குடும்ப பெண்ணாவே இருந்துட்டுப் போங்களேன்........ யாரு வேனான்னா?

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com