போட்டியை சமாளிக்க ஐஸ் எடுத்த அதிரடி முடிவு

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் மிக கவர்ச்சியாக நடிக்க உள்ளார். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு வயது சற்று தெரிந்தாலும் அழகும், நளினமும் குறையவில்லை. இருந்தாலும் ஏஜ் பேக்டர் பயம் ஐஸ்வர்யாவை தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. கத்ரீனா, தீபிகா, பிரியங்கா, சோனம் கபூர், சோனாக்ஷி என நீண்டு செல்கிறது பாலிவுட்டின் சின்ன சிட்டுகளின் பட்டியல். இவர்களுடன் போட்டா போட்டி போட மாஜி உலக அழகி அந்தஸ்து மட்டும் போதாது. எனவே தான் தனது புதிய படத்தில் ஐஸ்வர்யா அதிரடியாக மிக கவர்ச்சியாக தோன்ற சம்மதித்திருப்பதாக பாலிவுட் வட்டாரம் சலசலக்கிறது. முன்னதாக இந்தப் படத்திற்கு தேசிய விருது புகழ் இயக்குநர் மதுர் பந்தர்கர் கரீனா கபூரைத்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தார். முதலில் இந்த காட்சியில் நடிக்க தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க சம்மதித்துள்ளார். 'ஹீரோயின்' என்ற தலைப்பு கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பது பற்றிதான். ஏற்கனவே இதுபோன்ற கதையம்சங்களுடன் ஒருசில படங்கள் வெளியான போதிலும், அவற்றிலெல்லாம் இலைமறை காயாகத்தான் இதுபோன்ற அந்தரங்க காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.

ஆனால் முதன் முதலாக இந்த படத்தில்தான் திரையுலகின் மறுமுகம் தெரியப் போகிறது என்பது கூடுதல் தகவல். கதைக்கு பொருத்தமாகத்தான் கவர்ச்சியான காட்சிகள் இருக்கும் எதையும் மிகைப்படுத்தி காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கும் டைரக்டர் மதுர் பந்தர்கருக்கு கண்டிப்பாக திரைத்துறையில் இருந்தே எதிர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னம்மணி... புள்ளகுட்டி பெத்துக்கணும்னு ஐடியாவே இல்லையா?

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com